சீனாவின் ஆளுமையில் 5G , CIA எச்சரிக்கை

5G

தற்போது உலகின் எந்த பகுதியிலும் இருக்கக்கூடிய அதிவேக cell phone இணைப்பு 4G தொழில்நுட்பத்தை கொண்டது. ஆனால் அடுத்து வரவுள்ள 5G cell phone தொழில்நுட்பம் 4G வேகத்துடன் ஒப்பிடுகையில் பலமடங்கு வேகமானதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் HD தரம் கொண்ட திரைப்படத்தை சில நிமிடங்களில் download செய்ய வழிசெய்யும். அத்துடன் சாரதியில்லாத வாகனங்கள் போன்றவற்றை இயக்கவும் இது நன்கு பயன்படும்.
.
இதுவரைகாலமும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளே தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தின. தற்போதுள்ள 4G தொழில்நுட்பத்தின் பெரும்பாலான உரிமைகளையும் மேற்கு நாட்டு நிறுவனங்களே கொண்டுள்ளன. அதுமட்டுமன்றி எவ்வாறு கணைகள் இயங்குகின்றன, எவ்வாறு Internet செயல்படுகிறது என்பன எல்லாமே மேற்கு நாட்டு நிறுவனங்களின் உரிமையில் உள்ள நுட்பங்கள்.
.
ஆனால் 5G தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆளுமை மிகவும் அதிகரித்து உள்ளதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA எச்சரித்து உள்ளது. வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் இடம்பெற்ற Aspen Security Forum என்ற அமர்வின்போதே CIA அதிகாரி Michael Collins இவ்வாறு கூறியுள்ளார். அதனால் அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளின் ஆளுமை தொலைத்தொடர்பு மற்றும் Internet போன்ற விடயங்களில் குறைந்து போகும் என்று கூறப்படுகிறது.
.
தொழிநுட்பங்களில் ஆளுமை குறையும்போது, பொருளாதார ஆளுமை குறைவது மட்டுமன்றி, அரசியல் ஆளுமையும் குறையும்.
.
2023 ஆம் ஆண்டளவில் உலகில் சுமார் 1.3 பில்லியன் 5G இணைப்புகள் இருக்கும் என்றும், அதில் அரைப்பங்கு சீனாவிலேயே இருக்கும் என்று கூறுகிறது ஆய்வு நிறுவனமான CCS Insight. அக்காலத்தில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள மொத்த இணைப்புகளின் தொகை சுமார் 337 மில்லியன் ஆக மட்டுமே இருக்கும்.

.