சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி

ChinaCarrier

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இன்று புதன் முதல் தடவையாக நீரில் விடப்பட்டு உள்ளது. இக்கப்பல் முற்றாக சீனாவாலேயே கடப்பட்டது. இது சீனாவின் முதல் விமானம் தாங்கியான Liaoning வகையை சார்ந்தது.
.
2012 ஆம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த முதலாவது விமானம் தாங்கி சோவித் யூனியன் தயாரித்த ஒரு விமானம் தாங்கி. அதை கொள்வனவு செய்த சீனா, தனது கப்பல் கட்டும் துறையில் மறுசீர் செய்திருந்தது.
.
இன்று நீரில் விடப்பட விமானம் தாங்கியின் கட்டுமான வேலைகள் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பித்து இருந்தது. இந்த விமானம் தாங்கி 2020 ஆம் ஆண்டில் சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.

புதிய விமானம் தாங்கி சீனாவின் தயாரிப்பான J-15 வகை யுத்த விமானங்களை கொண்டிருக்கும். சுமார் 50,000 தொன் எடை கொண்ட இந்த விமானம் தாங்கி சுமார் 50 யுத்த விமானங்களையும் 12 ஹெலிகளையும் கொண்டிருக்க வல்லது.
.