சீனாவின் ஒலியிலும் 33 மடங்கு வேக Wind Tunnel

சீனாவின் ஒலியிலும் 33 மடங்கு வேக Wind Tunnel

சீனா ஒலியிலும் 33 மடங்கு வேகத்தில் (Mach 33, மாக் 33) காற்றோட்டம் ஏற்படுத்தக்கூடிய wind tunnel என்று அழைக்கப்படும் காற்று குகையை தயாரித்து உள்ளது. இவ்வகை காற்று குகைகளிலேயே விமானங்களின் இறக்கைகள், ஹெலிகளின் காற்றாடிகள், ஏவுகணைகள், ஏவு கலங்கள் ஆகியயன தயாரிப்புக்கு முன் ஆய்வு செய்யப்படும்.

2018ம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட JF-22 என்ற இந்த wind tunnel ஊடே காற்று சுமார் 11,500 m/sec வேகத்தில் செல்லும். ஒலியின் வேகம் 343 m/sec ஆக உள்ளதால், சீனாவின் புதிய wind tunnel உள்ளே காற்றின் வேகம் ஒலியுடன் ஒப்பிடுகையில் 33 மடங்காக இருக்கும்.

தற்போது உலகில் மிக வேகமான wind tunnel இதுவே. அமெரிக்காவில் தற்போது உள்ள wind tunnel வேகம் Mach 3.5 மட்டுமே, அதாவது ஒலியிலும் 3.5 மடங்கு வேகத்தில் குகை ஊடு காற்று செல்லும். கடந்த சில கிழமைகளுக்கு முன் அமெரிக்கா Purdue பல்கலைக்கழகத்தில் புதியதோர் wind tunnel அமைக்க அறிவித்து இருந்தாலும், இந்த புதிய குகையில் காற்றின் வேகம் ஒலியிலும் 7.5 மடங்காக மட்டுமே இருக்கும்.

2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சீனா பயன்படுத்தும் JF-12 என்ற wind tunnel ஒலியிலும் 5 முதல் 9 மடங்கு வேகத்தில் காற்றை செலுத்த வல்லது. சீனா தற்போது கொண்டுள்ள hyper-sonic விமானங்களுக்கும், கணைகளுக்கும் JF-12 குகை மூலமான ஆய்வுகள் உதவின.

உதாரணமாக தற்போது சீனா கொண்டுள்ள DF-21D என்ற ஏவுகணை ஒலியிலும் 10 மடங்கு வேகத்தில் (Mach 10) செல்லும்.