சீனாவின் தீவுப்பகுதி சூரிய மின் திட்டம் இடைநிறுத்தம்

சீனாவின் தீவுப்பகுதி சூரிய மின் திட்டம் இடைநிறுத்தம்

சீனாவின் Sino Soar என்ற நிறுவனம் இலங்கையின் வடக்கே உள்ள நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று  தீவுகளில் அமைக்கவிருந்த சூரிய மின் உற்பத்தி கட்டுமானம் நிறுத்தப்படுகிறது. இந்தியா விசனம் தெரிவித்தாலேயே இந்த திட்டம் கைவிடப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி இலங்கை அரசு Sino Soar நிறுவனத்துக்கு இந்த உரிமையை வழங்கி இருந்தது. இந்த திட்டம் Sinosoar-Etechwin என்ற கூட்டு முயற்சியாகவே நடைமுறை செய்யப்பட இருந்தது.

பதிலுக்கு இந்த நிறுவனம் மாலைதீவில் சூரிய மின்னை உற்பத்தி செய்யும். மாலைதீவுடனான திட்டம் நவம்பர் மாதம் 29ம் திகதி கையொப்பம் இடப்பட்டது.

மாலைதீவில் இந்த நிறுவனம் 2.5 மெகாவாட் (MW) சூரிய மின் உற்பத்தி கட்டுமானத்தையும், 975 கிலோவாட் (KW) மின் சேமிப்பு (battery) கட்டமைப்பையும் செய்யும்.