சீனாவின் புதிய Voice of China

ChinaFlag

சீனா China Central Television (CCTV), China National Radio, China Radio International ஆகிய மூன்று தொலைக்காட்சி மற்றும் வானொலி அமைப்புகளை இணைத்து Voice of China என்ற சேவையை உருவாக்குகிறது. இந்த புதிய சேவை சுமார் 14,000 ஊழியர்களை கொண்டிருக்கும். இந்த புதிய சேவையின் நோக்கம், சீனருக்கு மட்டுமல்லாது முழு உலகுக்கும் சீனாவை பிரசாரம் செய்வதே.
.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட Voice of America அமெரிக்காவை பிரசாரம் செய்வதை போலவே, Voice of China சீனாவை பிரசாரம் செய்யும். சீனாவின் அரச தரப்பு அறிக்கை ஒன்று Voice of China சேவையின் பணிகள் “propagating the party’s theories, directions, principles and policies” என்றுள்ளது.
.
China Radio International ஏற்கனவே 65 மொழிகளில் சேவைகளை செய்து வருகிறது.
.

Voice of China சீனாவின் பிரசார திணைக்களத்தின் (Department of Propaganda) கட்டுப்பாட்டில் இருக்கும்.
.