சீனாவின் வெளிநாட்டு இருப்பு $3.205 டிரில்லியன்

சீனாவின் வெளிநாட்டு இருப்பு $3.205 டிரில்லியன்

சீனாவின் வெளிநாட்டு இருப்பு (foreign reserves) ஏப்ரல் மாதம் $3.205 டிரில்லியன் ($3,205 பில்லியன்) ஆக அதிகரித்து உள்ளது. மார்ச் மாதம் இத்தொகை $3.184 டிரில்லியன் ஆக இருந்தது.

ஒரு மாதத்தில் மட்டும் சீனாவின் வெளிநாட்டு இருப்பு $21 பில்லியனால் அதிகரித்து உள்ளது.

அமெரிக்க டாலருடனான நாணய மாற்று விகிதம் ஏறி இறங்குவதும் கையிருப்பு தொகையை சிறிது மாற்றி அமைக்கும்.

அத்துடன் சீனாவின் தங்க கையிருப்பு 66.76 மில்லியன் troy அவுன்ஸ் (2.076 மில்லியன் kg) ஆக இருந்துள்ளது. சந்தை பெறுமதிப்படி அத்தங்கத்தின் பெறுமதி சுமார் $132.35 பில்லியன் ஆகும்.

அதேவேளை அமெரிக்காவின் மத்திய அரசின் கடன் 2022ம் ஆண்டில் $30.93 டிரில்லியன் ஆக இருந்தது. இதில் சுமார் $23.62 டிரில்லியன் (76%) அமெரிக்கரிடம் இருந்து பெற்றது. சுமார் $1 டிரில்லியன் சீனாவிடம் இருந்து பெற்றது.