சீனாவின் 3ம் விமானம் தாங்கி கடல் பரிசோதனையில்

சீனாவின் 3ம் விமானம் தாங்கி கடல் பரிசோதனையில்

சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான 316 மீட்டர் நீளம் கொண்ட Fujian கடல் பரிசோதனையில் இறங்கி உள்ளது என்று செய்மதி படங்கள் கூறுகின்றன. 

இந்த கப்பல் கட்டும் துறையில் இருந்து நவம்பர் 19ம் திகதி 27 மீட்டர் கடலுள் சென்று, இரண்டு தினங்களின் பின் கட்டும் துறைக்கு வந்துள்ளதை European Space Agency யின் Sentinel-2 என்ற செய்மதி படம் பிடித்துள்ளது.

முற்றாக சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல் காந்தப்புலம் (electromagnetic catapults) மூலம் யுத்த விமானங்களை மேலெழும்பும் நுட்பத்தை கொண்டது. தற்போது இந்த நுட்பம் 2017ம் ஆண்டு சேவைக்கு வந்திருந்த அமெரிக்காவின் Gerald R. Ford வகை விமானம் தங்கியில் ஒன்றில் மட்டுமே உள்ளது.

ஆரம்ப பரிசோதனையின்போது Fujian விமானம் போன்ற ஒரு வாகனத்தையும் கடலுள் வீசி catapult பரிசோதனை செய்தது. கடல் பரிசோதனை சுமார் ஒரு ஆண்டுகள் இடம்பெறும். அதன் பின்னரே விமானம் தாங்கி கடற்படையிடம் ஒப்படைக்கப்படும்.

இதுவரை நீராவியில் இயங்கும் catapults களை அமெரிக்க விமானம் தாங்கிகள் விமானங்களை ஏவ பயன்படுத்தின. நீராவி catapults பாரம் கூடியன, பராமரிப்பு செலவு கூடியன, பெருமளவு நன்னீரை பயன்படுத்துவன.