சீனாவில் அமெரிக்க யுத்த கப்பல்களின் வடிவமைப்புகள்

சீனாவில் அமெரிக்க யுத்த கப்பல்களின் வடிவமைப்புகள்

அமெரிக்காவின் யுத்த கப்பல்களின் அமைப்பை கொண்ட பல முழு அளவிலான பொய் பிரதிகள் (mock-ups) சீனாவில் அமைக்கப்பட்டு உள்ளமையை Maxar Technologies என்ற அமெரிக்க அமைப்பு தனது செய்மதி மூலம் அறிந்துள்ளது. இவை சீனாவில் வடமேற்கே உள்ள Xinjiang ப்குதி பாலைவனத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. சீனா தனது விமானம்தாங்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட DF-12D என்ற ஏவுகணைகளை பரிசோதனை செய்யவே இந்த பொய் பிரதி கப்பல்களை அமைத்துள்ளதாக அமெரிக்க கருதுகிறது.

இவற்றில் ஒரு பொய் பிரதி அமெரிக்காவின் US Ford-class விமானம் தாங்கி கப்பலின் அமைப்பை கொண்டது. இந்த பிரதியும் உண்மையான கப்பலின் நீளமான 75 மீட்டர் நீளத்தை கொண்டது. மேலும் இரண்டு அமெரிக்க Arleigh Burke-class வகை destroyer களின் அமைப்பை கொண்ட பிரதிகளும் அப்பகுதியில் காணப்பட்டு உள்ளன.

அண்மையில் சீனா ஒலியிலும் 5 மடங்கு வேகமாக பயணிக்கக்கூடிய hypersonic ஏவுகணை ஒன்றை பரிசோதனை செய்திருந்தது. இது வானத்தில் பதிவாக பயணிக்கும் வல்லமை கொண்டதால் எதிரி அதன் வருகையை முன்கூட்டியே அறிந்து எதிர்ப்பு ஏவுகணை மூலம் அழிக்க முடியாது.

சீனாவை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் அமெரிக்கா தாய்வான் இராணுவத்தை பலப்படுத்த, அதனால் விசனம் கொண்ட சீனா தாய்வானை மீண்டும் சீனாவுடன் இணைக்கும் தனது நோக்கை உரமாக அறிவிக்க அமெரிக்க, சீன, தாய்வான் உறவு முறுகல் நிலையில் உள்ளது.

படம்: Maxar