சீனாவில் கிழமைக்கு 3 மணித்தியால video game சட்டம்

சீனாவில் கிழமைக்கு 3 மணித்தியால video game சட்டம்

இன்று செப்டம்பர் 1ம் திகதி முதல் சீனாவில் இளைஞர்கள் கிழமைக்கு 3 மணித்தியாலங்கள் மட்டுமே இணையம் மூலம் video game விளையாட அனுமதிக்கப்படுவர். இளைஞர்கள் video game விளையாடலுக்கு அடிமையாவதை தவிர்ப்பதே சீன அரசின் நோக்கம்.

புதிய சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்டோர் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், மாலை 8 மணி முதல் 9 மணி வரையே இணையத்தில் விளையாட அனுமதிக்கப்படுவர். விடுமுறை தினங்களிலும் 1 மணித்தியாலம் விளையாட அனுமதிக்கப்படுவர்.

Computer, smartphone, tablet, game console ஆகிய எல்லா வகை video game பொருட்களும் இந்த சட்டத்துக்கு உட்படும்.

இவ்வகை சட்டம் ஒன்றை மேற்கு நாடுகளில் நடைமுறை செய்வது சாத்தியமாகாது. அங்கு மனித உரிமை மீறல் என்று வாதாடும் வழக்குகள், தொழில்நுட்ப வசதி இல்லை என்ற சாட்டுகள் எல்லாம் முன்வைக்கப்படும். ஆனால் சீனா புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்படி சட்டத்தை நடைமுறை செய்யவுள்ளது.

இந்த சட்டத்தை கடைப்பிடியாத video game நிறுவனங்கள் கடுமையாக தண்டிக்கப்படும். இந்த நிறுவனங்கள் facial recognition நுட்பங்களை பயன்படுத்தி விளையாடுவோரை அடையாளம் காண முடியும். Tencent Holding என்ற video game நிறுவனம் ஏற்கனவே அங்கு facial recognition முறையை நடைமுறை செய்துள்ளது.

உலக அளவில் இந்த ஆண்டு சுமார் 3 பில்லியன் பேர் video game விளையாடுவர் என்றும், அவரகள் சுமார் $176 பில்லியன் பணத்தை செலவழிப்பர் என்றும் Newzoo என்ற கணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.