சீனாவில் மூன்று குழைந்தை கொள்கை

சீனாவில் மூன்று குழைந்தை கொள்கை

ஒவ்வொரு குடும்பமும் பெறக்கூடிய குழந்தைகளின் அதிக எண்ணிக்கையை சீனா 3 ஆக திங்கள்கிழமை அதிகரித்து உள்ளது.

அதிகரித்து வந்திருந்த சனத்தொகையை குறைக்க 1979ம் ஆண்டு முதல் குடும்பம் ஒரு குழந்தை மட்டுமே பெறலாம் என்று சீனா சட்டம் இயற்றி இருந்தது. அத்துடன் மேலதிக குழந்தைகள் பெறுவோருக்கு தண்டனைகள் வழங்கி, அரச சலுகைகளையும் நீக்கி இருந்தது.

ஆனால் செல்வந்தம் வளர்ந்த சீனாவில் சனத்தொகை வேகமாக குறைய ஆரம்பித்தது. அதனால் 2016ம் ஆண்டு இரு குழந்தைகள் பெறலாம் என்று சீனா சட்டத்தை மாற்றி இருந்தது. ஆனாலும் சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்ததே செல்கிறது.

இந்நிலையிலேயே சீனா திங்கள் முதல் பெற்றார் 3 குழந்தைகள் வரை பெறலாம் என்று சட்டத்தை மாற்றி அமைகிறது. அந்த சட்டத்துக்கு உறுதுணையாக பெரும் குடும்பங்களுக்கு பல வசதிகளையும் சீன அரசு செய்யவுள்ளது.

சட்டங்கள் மாறினாலும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறமுடியாது. செல்வந்தம் அதிகரித்த பெருநகர் மக்களின் விருப்பங்களும் மாறி உள்ளன. 2020ம் ஆண்டுக்கான  சனத்தொகை கணிப்பின்படி (census) அந்த ஆண்டு 12 மில்லியன் குழந்தைகளே அங்கு பிறந்து உள்ளனர். 2016ம் ஆண்டில் 18 மில்லியன் குழந்தைகள் பிறந்து இருந்தனர்.