சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் விரட்டப்பட்டனர்

சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் விரட்டப்பட்டனர்

சீனாவில் மேலும் 9 உயர் அதிகாரிகள் அரச பதவிகளில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை விரட்டப்பட்டு உள்ளனர். இவர்கள் ஊழல்களில் பங்கெடுத்து இருந்தனர் என்று கருதப்படுகிறது. ஆனால் சீன அரசு பதவி பறிப்புக்கான காரணங்களை பகிரங்கம் செய்யவில்லை.

விரட்டப்பட்டோரில் 5 பேர் சீனாவின் இரகசியம் நிறைந்த படையான Rocket Force படை அங்கத்தவர். அதில் ஒருவர் Li Yuchao என்ற Rocket Force படையின் commander.

மேலும் 2 பேர் Equipment Development திணைக்கள அங்கத்தவர். அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சரும் இந்த திணைக்களத்தில் பணியாற்றியவர்.

Ding Laihang என்ற முன்னாள் விமானப்படை commander ரும் கூடவே பதவியை இழந்துள்ளார். ஒன்பதாவது நபர் கடற்படை அதிகாரி ஒருவர்.

சீன சனாதிபதி சீ சீனாவில் ஊழலை ஒழிக்க கடுமையாக உழைத்து வருகிறார். செல்வம் நிறைந்து வரும் சீனாவில் ஊழல்கள் இடம்பெற நிறைய வாய்ப்பும் உண்டு.