சீனாவில் மோடி

ChinaIndia

இந்திய பிரதமர் மோடி இன்று சீனா சென்றுள்ளார். இவர் சீனாவில் 3 நாட்கள் தங்கியிருப்பார். இவர் முதலில் சீனாவின் பழம்பெரும் சியான் (Xian) நகரை அடைந்துள்ளார். இவரை வரவேற்றது சீன ஜனாதிபதி சி பிங் (Xi Ping).
.
வழமையாக சீன தலைநகர் பெய்ஜிங்கிலேயே வெளிநாட்டு தலைவர்கள் வரவேற்கப்படுவர். ஆனால் மோடி சீன ஜனாதிபதி சி பிங்கின் மரபு பிரதேசமான சியானில் வரவேற்க்கப்பட்டுள்ளார். சி பிங் இந்தியா கடந்த வருடம் வந்தபோது, அவர் மோடியின் மரபு பிரதேசமான அஹேமதாபாத்திலேயே மோடியால் வரவேற்கப்பட்டிருந்தார்.
.
மோடியின் இந்த பயணத்தின் போது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சுமார் $10 பில்லியன் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.
.
அத்துடன் இந்தியாவின் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் சீனவில் மேலதிக சந்தையை தேடவும் மோடி விரும்புகிறார். தற்போது இந்தியாவின் சீனாவில் இருந்தான இறக்குமதி, சீனாவுக்கான ஏற்றுமதியைவிட $48 பில்லியன் அதிகம்.
.

சீனாவும் இந்தியாவின் பெரும் கட்டுமான வேலைகளில் முதலிட விரும்புகிறது. உதாரணமாக அதிவேக ரயில் சேவை கட்டுமான வேலைகளை சீன செய்ய விரும்புகிறது.