சீனாவில் LingWu Dragon எலும்புகள் அகழ்வு

LingWuLong

சீனாவின் வடமேற்கு பகுதியான LingWu என்ற இடத்தில் புதிய வகை dinosaur எலும்புகள் அகழ்வு செய்யப்பட்டுள்ளன. LingWuLong Shenqi (LingWu Amazing Dragon) என்று பெயரிடப்பட்ட இந்த தாவரம் உண்ணும் விலங்குகள் சுமார் 175 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் சென்று கூறப்படுகிறது.
.
சீனாவில் அகழ்வு செய்யப்பட்ட இந்த விலங்குகளின் தலையில் இருந்து வால் நுனி வரையான நீளம் சுமார் 57 அடி என்று அறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் பின், இதுவரை கணித்திருந்த காலத்துக்கும் 15 மில்லியன் வருடங்களுக்கு முன்னரேயே dinosaurs வாழ்ந்துள்ளதாக திருத்தும் செய்யப்பட்டுள்ளது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய ஆகிய இடங்களின் இதுவரை அகழ்வு செய்யப்பட்ட எலும்புகள் அனைத்தும் 160 மில்லியன் வருடங்கள் அல்லது அதிலும் குறைந்த காலமே பழமையானவை.
.

Chinese Academy of Sciences என்ற அமைப்பின் Xing Xu தலைமையிலான குழுவே இந்த எலும்புகளை கண்டெடுத்து உள்ளது. இங்கு 8 முதல் 10 dinosaurகளின் எலும்புகள் இருந்துள்ளன.
.