சீனாவில் Vatican, சீன முறைப்படி

Vatican

இத்தாலியின் Rome நகருள் உள்ள Vatican உலக Roman கத்தோலிக்கத்தின் தலைமையகம். பல நூறு வருடங்களாக உலகம் எங்கும் புகுந்து ஆளுமை செய்த Vatican சீனாவுள் மட்டும் இதுவரை நுழைந்து ஆதிக்கம் செலுத்த முடிந்திருக்கவில்லை. ஆனால் வேறுவழி எதுவும் இன்றி தற்போது Vatican சீனாவின் கொள்கைகளுக்கு இணங்கி, சீனாவின் அரசின் ஆதரவை பெற்று, சீனாவுள் சட்டப்படி நுழைகிறது.
.
முதலில் சீனாவின் Emperorகள், அந்நிய நாட்டில் தலைமையகத்தை கொண்ட கத்தோலிக்க தலைமை தம் நாட்டுள் ஆதிக்கம் செய்ய விடாது தடுத்திருந்தனர். அக்காலங்களில் கத்தோலிக்கம் colonial அரசியலில் மூழ்கி இருந்தது. சீன மக்கள் மத்தியில் அப்போது சிறிது கத்தோலிக்கம் பரவி இருந்தாலும், பெரும் கத்தோலிக்க நிகழ்வுகள் அங்கு இருந்திருக்கவில்லை.

பின் 1949 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அதே கொள்கையை பின்பற்றியது. 1957 ஆம் ஆண்டில், Vatican பிரதிநிதிகளை தவிர்த்து, சீனா Patriotic Catholic Association என்ற உள்நாட்டு கத்தோலிக்க கட்டமைப்பையம் உருவாக்கி இருந்தது. சீன அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கட்டமைப்பை Vatican நிராகரித்து இருந்தது.
.

சுமார் 1.3 பில்லியன் மக்கள் உள்ள நாட்டில் சுமார் 10 மில்லியன் கத்தோலிக்கர் மட்டுமே தற்போது உள்ளனர். Vaticanனின் தலைமையை விரும்பும் சீன கத்தோலிக்கர் தம் வீடுகளில் மட்டுமே நிகழ்வுகளை நிகழ்த்தினர்.
.
இந்நிலையில் தற்போது Vatican சீன அரசுடன் இணக்கம் கண்டுள்ளது. இந்த இணக்கப்படி சீனாவே சீன கத்தோலிக்க மதகுருமாரை தெரிவு செய்யும்.Vaticanனுக்கு சீனா தெரிவு செய்த குருமாரை விரும்பின் veto செய்யும் உரிமை உண்டு. மேலும் Vatican சீனா நியமித்த 7 bishopகளை Vatican ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. அத்துடன் Vatican நியமித்த bishopகளை ஓய்வு பெறும்படியும் Vatican கேட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டில் Vatican நியமிக்கப்பட்ட Bishop Peter Zhuang Jianjian நீக்கப்பட்டு, அவரிடத்துக்கு சீன ஆதரவு Bishop Huang Bingzhang நியமிக்கப்படுவார். Huang Bingzhang ஒரு சீன National People’s Congress உறுப்பினரும் ஆவார்.
.
இந்த ஒப்பந்தத்தால் விசனம் கொண்ட முன்னாள் Hong Kong Cardinal Joseph Zen Ze-kiun, Vatican சீன கத்தோலிக்கத்தை சீனாவுக்கு விற்றுவிட்டது என்றுள்ளார்.
.
இவற்றுக்கு எல்லாம் மேலாக Vatican, தாய்வானை சீனாவின் அங்கம் என்று ஏற்றுக்கொள்வும் முன்வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுவரை Vatican தாய்வானை ஒரு சுதந்திர நாடாகவே ஏற்று இருந்தது.
.