சீனாவை தடுக்க அமெரிக்காவும் Solomon விரைவு

சீனாவை தடுக்க அமெரிக்காவும் Solomon விரைவு

சீனா அண்மையில் சாலமன் (Solomon) தீவுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தால் விசனம் கொண்ட அமெரிக்காவும் Kurt Campbell, Daniel Kritenbrink ஆகிய அமெரிக்க அதிகாரிகளை சாலமன் தீவுக்கு அனுப்புகிறது. சீனாவுடன் சாலமன் தீவுகள் செய்து கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கையை தடுப்பதே இவர்களின் நோக்கம்.

அமெரிக்காவின் அதிகாரியான Ned Price என்பவரும் இந்த இணக்கம் “leaves the door for the deployment of P.R.C. military” என்றுள்ளார்.

சில தினங்களுக்கு முன் அஸ்ரேலியாவும் தனது அதிகாரிகளை சாலமன் தீவுக்கு அனுப்பி தனது விசனத்தை தெரிவித்து இருந்தது.

சீன-சாலமன் இணக்கப்படி சீன படைகள் சாலமன் தீவுக்கு சென்று தங்கலாம். அத்துடன் சீன போலீஸ் மற்றும் படையினரை சாலமன் அரசு உதவிக்கு அழைக்கலாம். ஆனால் அஸ்ரேலியாவும், அமெரிக்காவும் இதை விரும்பவில்லை.

அதேவேளை 1993ம் ஆண்டு மூடப்பட்ட அமெரிக்க தூதுவக்கரத்தையும் தலைநகர் Honiara வில் மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா விரும்புகிறது. சீனாவின் ஆளுமையை தடுக்கவே இந்த தூதரக முயற்சியும்.