சீனாவை விழுத்த வியட்நாமை அமெரிக்கா பயன்படுத்தும்?

சீனாவை விழுத்த வியட்நாமை அமெரிக்கா பயன்படுத்தும்?

அடுத்த கிழமை வியட்நாம் செல்லும் அமெரிக்க சனாதிபதி பைடென் வியட்நாமுடனான அமெரிக்காவின் உறவை மேலும் உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு போட்டியாக வியட்நாமை பைடென் வளர்க்க முனையக்கூடும்.

வியட்நாம் யுத்தத்துக்கு பின் அமெரிக்கரின் வெறுப்புக்குரிய நாடாக இருந்த வியட்நாமை அமெரிக்கா மெல்ல நெருங்க ஆரம்பித்துள்ளது.

வியட்நாமுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவுக்கு செப்டம்பர் 10ம் திகதி வியட்நாம் செல்லும் பைடென் two-step upgrade வழங்கும் சாத்தியங்கள் உண்டு என்றும் செய்திகள் கூறுகின்றன.

பைடென் வியட்நாமில் உள்ளபோது அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing சில திட்டங்களை அறிவிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.