சீனா: அமெரிக்க குணம் தொடரின் மோதல் தவிர்க்க முடியாது

சீனா: அமெரிக்க குணம் தொடரின் மோதல் தவிர்க்க முடியாது

அமெரிக்கா சீனாவை சுற்றி வளைத்து, கட்டுப்படுத்தி, அமுக்க முனைகிறது என்றும் அமெரிக்காவின் இந்த குணம் தொடர்ந்தால் மோதல் தவிர்க்க முடியாது என்றும் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் சின் காங் (Qin Gang) செவ்வாய் கூறியுள்ளார்.

இதுவரை காலமும் அமெரிக்காவுக்கான சீன தூதுவராக இருந்த Qin Gang தற்போது சீனாவின் வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இவர் சீன சனாதிபதி சீக்கு நெருக்கமானவர்.

அத்துடன் யூக்கிறேன் யுத்தத்தை ஒரு மாய கை (invisible hand) நெருப்பூட்டி வளர்கிறது என்றும் Gang சாடியுள்ளார். அத்துடன் சீனா யூக்கிறேன் ஆரம்பிக்கவுக்கும் இல்லை, யுத்தத்தை ஆயுதம் வழங்கி வளர்க்கவும் இல்லை என்றும் Gang கூறியுள்ளார்.

நெருக்கடியான உலகில் சீன-ரஷ்ய உறவு மேலும் வலுவாகும் என்றும் Gang கூறியுள்ளார்.

அமெரிக்கா தாய்வானுக்கு ஆயுதம் வழங்கி சீனாவின் உள்நாட்டு விசயத்தில் தலையிடுகிறது என்றும் Gang சாடியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் தனது முயற்சி மூலம் போட்டியிட்டு வெற்றி பெற முனையாமல் அமெரிக்கா அடுத்த போட்டியாளரை தள்ளி விழுத்தி Para-Olympic போட்டிக்கு அனுப்பிவிட்டு தான் வெல்ல முனைவது போல உள்ளது என்றும் Gang கூறியுள்ளார்.

சீன வெளியுறவு அமைச்சர் தனது முதல் அமர்விலேயே அமெரிக்காவை சாடுவதால் அமெரிக்க, சீன முறுகல் நிலை தொடரும் என்று தெரிகிறது.