சீனா இலங்கைக்கு மேலும் $295 மில்லியன் உதவி

SriLankaChina

சீன ஜனாதிபதி Xi JinPing இலங்கை ஜனாதிபதியின் திட்டங்களுக்கு மேலும் $295 மில்லியன் உதவி வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொலநறுவையில் சீனாவின் உதிவியுடன் நிறுவப்படும் வைத்தியசாலை ஒன்றின் அடிக்கல் நடும் வைபவம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளார்.
.
“சீனாவின் தூதுவர் இ சியன் லிஅங் (Yi XianLiang) இந்த அடிக்கல் நடும் தினத்தை குறிப்பிட என் வீட்டுக்கு வந்தபொழுதே சீனாவின் ஜனாதிபதி மேலும் ஒரு அன்பளிப்பை செய்யவுள்ளதை கூறினார்” என்றுள்ளார் சிறிசேன.
.
ஜனாதிபதி சிறிசேன மேலும் கூறுகையில், தனது விருப்பத்திற்கு அமையும் திட்டங்களுக்கு சீனா 2 பில்லியன் சீன யுவான் (சுமார் $295 மில்லியன்) வழங்கவுள்ளதாகவும், தான் அந்த பணத்தில் அனைத்து தொகுதிகளிலும் வீடுகள் அமைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
.
பொலநறுவையில் புதிதாக கட்டப்படும் சிறுநீரக வைத்தியசாலை தங்கியிருந்து வைத்தியம் செய்வோருக்கு 200 கட்டில்களையும், 100 blood dialysis கட்டில்களையும், வெளிநோயாளர் பகுதியையும் கொண்டிருக்கும்.
.