சீனா தொடர்புகளை துண்டித்ததால் அமெரிக்கா விசனம்

சீனா தொடர்புகளை துண்டித்ததால் அமெரிக்கா விசனம்

அமெரிக்காவின் House Speaker நான்சி பெலோஷி தாய்வான் சென்றதால் சீனா அமெரிக்காவுடனான பல தொடர்புகளை துண்டித்து இருந்தது. அதனால் விசனம் கொண்ட Antony Blinken என்ற அமெரிக்காவின் Secretary of State சீனாவின் செயல் பொறுப்பற்ற செயல் (“irresponsible steps”) என்று இன்று சனிக்கிழமை சாடி உள்ளார்.

பாதுகாப்பு, போதை கடத்தல், சர்வதேச குற்றம், சூழல் மாசடைதல் உட்பட 8 துறைகளில் அமெரிக்காவும் சீனாவும் இணைந்து செயலாற்றிய. அவற்றையே சீனா தற்போது இடைநிறுத்தி உள்ளது.

ஆசியாவில் பெருமளவு அமெரிக்க படைகள் இயங்குவதால் அமெரிக்காவினதும், சீனாவினதும் படைகள் தமக்கிடையே தொடர்புகளை கொண்டிருப்பது அவசியம். அவ்வாறு இல்லையெனில் அறியாமையால் தவறுகள் இடம்பெறலாம்.

சூழல் பாதுகாப்பும் (climate change) அமெரிக்க சனாதிபதியின் ஆட்சிக்கு ஒரு பிரதான விசயம். அதற்கு சீனாவின் ஒத்துழைப்பும் பிரதானம்.

தாய்வானுக்கும் சீனாவும் இடையில் உள்ள தாய்வான் நீரிணை மூலம் 50% உலக கொள்கலன் கப்பல்களும், 90% பெரும் கப்பல்களும் செல்கின்றன என்றும் இங்கே சீன இராணுவம் பயிற்சி செய்வதால் கப்பல் போக்குவரத்து தடைப்படுகிறது என்றும் Blinken கூறியுள்ளார்.

அதேவேளை சீன-தாய்வான் முரண்பாட்டை பெருபிக்கவும் அமெரிக்கா விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் Blinken.