சீனா 7 nm chip தயாரித்தது, அமெரிக்காவுக்கு பதிலடி

சீனா 7 nm chip தயாரித்தது, அமெரிக்காவுக்கு பதிலடி

கடந்த கிழமை சீனாவின் Huawei நிறுவனம் விற்பனைக்கு விட்ட Huawei Mate Pro 60 என்ற தொலைபேசி (smartphone) 7 நானோ மீட்டர் (7 nm) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது என்று கனடாவின் ஒட்டாவா நகரை தளமாக கொண்ட Techinsights என்ற reverse engineering நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் HiSilicon என்ற நிறுவனம் தயாரித்த Kirin 9000s என்ற chip பே புதிய 7 nm தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த chip 5G வேகத்திலும் அதிகமான வேகத்தில் இயங்குகிறது. இது அமெரிக்காவின் Intel போன்ற நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக அமையும்.

இதுவரை சீனாவின் SMIC நிறுவனம் 14 நானோ மீட்டர் chip களையே தயாரிக்கும் அறிவை கொண்டிருந்தது. புதியதான 5 nm chip களை சீனா தயாரிப்பதை தடுக்க அமெரிக்கா கடும் முயற்சி செய்தது. 

மேற்கு நாடுகளின் நிறுவனங்கள் புதிய chip களை ஏற்றுமதி செய்வதை மட்டுமன்றி, புதிய வகை chip களை தயாரிக்கும் இயந்திரங்களையும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஆனால் சீனா தடைகளையும் மீறி தனது சொந்த 7 nm chip களை உருவாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் சீனா சென்ற அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Raimondo தனது நாடு நடைமுறை செய்த போட்டியை கைவிட்டு முறுகல் நிலையை தணிக்க முயன்றிருந்தார். ஆனால் சீனா தன் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை.