சீன கலம் அனுப்பும் சந்திரனின் மறுபக்க படங்கள்

Change4

சீனா சந்திரனின் மறுபக்கத்துக்கு அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக இறங்கியதுடன், அங்கிருந்து படங்களை அனுப்பவும் ஆரம்பித்துள்ளது. சந்திரனின் மறுபக்கத்தில் மனித கலம் தரை இறங்குவது இதுவே முதல் தடவை.
.
சந்திரனின் மறுபக்கம் எப்போதும் பூமியின் பார்வைக்கு அப்பால் இருப்பதால், அங்கிருந்து பூமியில் உள்ள தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை என்பதாலேயே சந்திரனின் மறுபக்கத்தில் தரை இறங்குவது இதுவரை தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்த குறைபாட்டை தவிர்க்க சீனா ஒரு செய்மதியை சந்திரனுக்கு அப்பால், 65,000 km தூரத்தில், வலம்வர வைத்துள்ளது.
.
டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஏவப்பட்ட இந்த விண்கலம் டிசம்பர் 12 ஆம் திகதி சந்திரனின் எல்லைக்குள் சென்றது. பின்னர் படிப்படியாக இறங்கி, கடந்த வியாழன் பாதுகாப்பாக தரை இறங்கி இருந்தது. அமெரிக்காவோ அல்லது ரஷ்யாவோ இதை இதுவரை இந்த சாதனையை செய்திருக்கவில்லை.
.
விண்கலம் தரை இறங்கிய பகுதி Van Karman என்று அழைக்கப்படும். சுமார் 2,500 km விட்டமும், 13 km ஆழமும் கொண்ட இந்த கிடங்கு சந்திரனில் உள்ள மிக பெரிய கிடங்காகும்.
.
இந்த கலத்துள் பருத்தி, rapeseed, உருளை கிழங்கு, கொசு (fruit fly), yeast,  Arabidopsis என்பனவும் ஆய்வு நோக்கில் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

.