சீன கொடியின் கீழ் விளையாடும் வெளிநாட்டு சீனர்

சீன கொடியின் கீழ் விளையாடும் வெளிநாட்டு சீனர்

தற்போது பெய்ஜிங்கில் இடம்பெறும் 2022 Winter ஒலிம்பிக் போட்டியில் சீன கொடியின் கீழ் விளையாடும் பல சீன விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் பிறந்த இரண்டாம் சந்ததியினரே. சீனாவின் மிகையான வளர்ச்சி இவர்களை சீனா சார்பில் விளையாட தூண்டி உள்ளது.

Eileen Gu என்ற 18 வயதான freestyle skier பெண் வீரர் அமெரிக்காவின் San Francisco நகரில் பிறந்த அமெரிக்கர். இவரின் தாய் சீனர், தந்தை அமெரிக்கர். ஆனால் சீன கொடியின் கீழ் விளையாடும் நோக்கில் இவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, சீன குடியுரிமையை பெற்று இருந்தார். சீனா இரட்டை குடியுரிமையை ஏற்பது இல்லை. பதக்கம் வென்ற இவர் சீனாவில் தற்போது பிரபலம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பிறந்த 19 வயதான Beverly Zhu என்ற பெண் தனது பெயரையும் Zhu Yi என்று மாற்றி சீனா சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் இவர் தோல்விகளை சந்தித்து, சில சீனாரின் வசைபாடலுக்கும் உள்ளானார். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிப்பித்த இவரின் தந்தையும் தற்போது சீனா பல்கலைக்கழகம் ஒன்றி படிப்பிக்கிறார்.

மொத்தம் 25 பேரை கொண்ட சீனாவின் hockey அணியிலும் 6 பேர் மட்டுமே சீனாவில் பிறந்த வீரர்கள் என்றும் கூறப்படுகிறது.

சீனா இவ்வாறு வெளிநாடுகளில் பிறந்த சீனரை குடியுரிமை வழங்கி சீனா சார்பில் விளையாட வைப்பது தற்காலங்களிலேயே அதிகரித்து உள்ளது. வெளிநாடுகளில் பிறந்த இரண்டாம் சந்ததி சீனரும் சீனா நோக்கி பயணிக்க ஆரம்பித்து உள்ளனர்.

அதேவேளை அமெரிக்காவின் Fox News என்ற செய்தி நிறுவனம் Gu வை “ungrateful child of America” என்று தாக்கி உள்ளது. நீண்ட காலமாக பல ரஷ்யர் பொருளாதார நலன்களுக்காக  அமெரிக்கா சென்று அமெரிக்கா சார்பில் விளையாடி உள்ளனர்.