சீன சீ, யூக்கிறேன் செலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்

சீன சீ, யூக்கிறேன் செலன்ஸ்கி தொலைபேசி உரையாடல்

சீன சனாதிபதி சீயும், யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியும் இன்று புதன் தொலைபேசி மூலம் உரையாடினர். ரஷ்யா யூக்கிறேனை ஆக்கிரமித்த பின் சீயும், செலன்ஸ்கியும் உரையாடுவது இதுவே முதல் தடவை.

இவர்களின் உரையாடல் யூக்கிறேனில் சமாதான நிலையை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த உரையாடல் நீண்ட நேரம் இடம்பெற்றது என்றும், அர்த்தமுள்ளது என்றும் செலன்ஸ்கி உரையாடலை விபரித்துள்ளார்.

சீனா இதுவரை ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை நிராகரித்து பேசியது இல்லை. பதிலுக்கு NATO நாடுகளையே யுத்தத்துக்கு காரணம் என்று கூறியது.

ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகளை சீனா கணிசமான அளவில் செயலிழக்க செய்துள்ளது. அதனால் ரஷ்ய பொருளாதாரம் முறியாது உள்ளது.

சவுதி, ஈரான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரோதத்தை அமெரிக்கா வளர்த்துவர, சீனா அண்மையில் அந்த இரண்டு நாடுகளையும் நடப்புக்கொள்ள வைத்துள்ளது.

ஆனாலும் யூக்கிறேனில் சீனா அதிகம் வெற்றியை கொள்ளுமா என்பது சந்தேகமே. யுத்த நிறுத்தம் ஒன்று வந்தாலும் ரஷ்யா கிரைமியாவை கைவிடாது.