சீன-தாய்வான் முறுகலால் Solomon தீவுகளில் வன்முறை

சீன-தாய்வான் முறுகலால் Solomon தீவுகளில் வன்முறை

சிறிய, வறிய நாடுகளின் உள்நாட்டு கலவரங்களை வல்லரசுகள் தமது அரசியல் நகர்வுகளுக்கு பயன்படுத்த எரியும் தீயை ஊதி வளர்ப்பது உண்டு. அஸ்ரேலியாவுக்கு வடமேற்கே உள்ள Solomon தீவுகளிலும் (Solomon Islands) அவ்வகை வல்லரசுகள் தூண்டும் கலவரங்கள் மீண்டும் தலை தூக்கி உள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை அஸ்ரேலியா தனது படைகளில் சிறு தொகையை அந்நாடு தலைநகர் Honiara நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை பாதுகாக்க அனுப்பி உள்ளது. சுமார் 100 பேர் கொண்ட இந்த படை Solomon பிரதமர் Manasseh Sogavare யின் அழைப்பை ஏற்றே சென்றன.

வன்முறையாளர் அந்நாட்டு அரசு நடைமுறை செய்த கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட வீதிக்கு வந்திருந்தனர் என்று கூறப்பட்டாலும் அங்கு உள்ள Malaita மற்றும் மத்திய அரசை கொண்ட Guadalcanal ஆகிய இரண்டு பெரிய தீவுகளுக்கு இடையிலான முறுகல் நிலை தற்போது சீன-தாய்வான் முரண்பாடாக மறியாமையே உண்மையான காரணம் ஆகிறது.

சுமார் 700,000 மக்களை கொண்ட இந்த நாட்டின் இனங்கள் இடையே நீண்ட காலமாக முறுகல் நிலை இருந்து வந்துள்ளது. 1990களில் Guadalcanal தீவு ஆயுத குழு Malatia தீவு மக்களை தாக்கி இருந்தது. 2003 முதல் 2017 வரை அங்கு நிலைகொண்ட அஸ்ரேலிய படைகள் $2.2 பில்லியன் செலவில் ஆயுத கிளர்ச்சியை அடக்கி இருந்தன.

2019ம் ஆண்டு Solomon பிரதமர் தாய்வானுடன் கொண்டிருந்த தொடர்பை துண்டித்து, சீனாவுடன் தொடர்பை ஆரம்பித்தார். அதனால் விசனம் கொண்ட அமெரிக்காவும், தாய்வானும் தமக்கு ஆதரவான Malaita தீவு மாநில அதிகாரிகளுக்கு பெருமளவு உதவிகளை செய்து வருகின்றனர்.

2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா Malaita தீவு மாநிலத்துக்கு மட்டும் $25 மில்லியன் உதவி செய்திருந்தது. இத்தொகை வழமையாக கிடைக்கும் நன்கொடையின் 50 மடங்கு என்று கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்தும் தாய்வானிடம் இருந்தும் உதவி பெறுவோரே வன்முறையை செய்வதாக Solomon பிரதமர் மறைமுகமாக கூறி உள்ளார்.

அங்கு பல சீன நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. கூடவே போலீஸ் நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள் ஆகியனவும் தீயிடப்பட்டு உள்ளன