சீன நிறுவன அதிகாரி $313 மில்லியனுடன் தலைமறைவு

சீன நிறுவன அதிகாரி $313 மில்லியனுடன் தலைமறைவு

China Fortune Land Development என்ற அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு money manager ஆக பணிசெய்தவர் $313 மில்லியன் பணத்துடன் தலைமறைவு ஆகி உள்ளார் என்கிறது Fortune Land நிறுவனம். இந்த money manager உடன் தாம் தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் Fortune Land கூறியுள்ளது. இது தொடர்பாக சீன போலீசிலும் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Fortune Land நிறுவனத்தின் கையில் உள்ள பணத்தை வேறு திட்டங்களில் முதலீடு செய்யும் நோக்கில் Wingskengo என்ற நிறுவனத்தின் உதவி நாடப்பட்டது. Wingskengo வழங்கிய ஆலோசனைப்படி $313 மில்லியன் பணம் China Create Capital என்ற British Vergin Islands இல் பதியப்பட்ட பினாமி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

பினாமி நிறுவன முதலீடு மூலம் Fortune Land 7% முதல் 10% வரையான வட்டி பெறும் என்று Create Capital கூறி இருந்தது. தற்போது வட்டியும் இல்லை, முதலும் இல்லை.

பணத்தை கையாண்ட Create Capital அதிகாரியே தற்போது பணத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

இந்த செய்தியால் Fortune Land நிறுவனத்தின் Shanghai Stock Exchange இல் பதியப்பட்ட பங்குச்சந்தை பங்கு சுமார் 70% பெறுமதியை இழந்து உள்ளது.

மேற்கு நாடுகள் தமது நாடுகளுள் திருட்டு பணம் வருவதை கண்டும் காணாமல் இருப்பதால் ஆசிய, ஆபிரிக்க திருடர்கள் தமது திருட்டு பணத்துத்தடன் இலகுவில் மேற்கு நாடுகளுக்கு சென்று சொத்துக்களை கொள்வனவு செய்கின்றனர்.