சீன பயணிகள் விமானம் 132 பேருடன் வீழ்ந்தது

சீன பயணிகள் விமானம் 132 பேருடன் வீழ்ந்தது

China Eastern என்ற சீன விமான சேவைக்கு சொந்தமான Boeing 737-800 வகை விமானம் ஒன்று இன்று 132 பேருடன் வீழ்ந்து உள்ளது. சீனாவின் தென் மேற்கே உள்ள Kunming என நகரத்தில் இருந்து Guangzhou சென்ற விமானமே வீழ்ந்து உள்ளது.

இன்று 13:11 மணிக்கு Kunming நகரில் பயணத்தை ஆரம்பித்த Flight MU5735 Guangzhou நகரை 15:05 மணிக்கு அடைய இருந்தது. பயணத்தை ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விமானம் விபத்துக்கு முன் 29,100 அடி உயரத்தில் இருந்ததாகவும், 2 நிமிடங்கள் 15 செக்கன்களின் பின் 9,075 அடி உயரத்தில் இருந்ததாகவும் அறியப்படுகிறது.

விபத்துக்கான காரணம், பலியானோர் விபரம் இதுவரை அறியப்படவில்லை. தப்பியவர் எவரும் இதுவரை அறியப்படவும் இல்லை.

China Eastern தன்னிடம் உள்ள அனைத்து 737-800 வகை விமானங்களையும் சேவையில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இந்த விமானம் சர்ச்சைக்குரிய 737 Max வகை விமானம் அல்ல. இது அதற்கு முன்னைய சந்ததி விமானம்.