சீன EV வாகனங்களுக்கு பைடென் 102.5% இறக்குமதி வரி

சீன EV வாகனங்களுக்கு பைடென் 102.5% இறக்குமதி வரி

மின்னில் இயங்கும் (EV) சீன வாகனங்களின் தரத்தால் மிரண்ட அமெரிக்காவின் பைடென் அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் EV வாகனங்களுக்கு இன்று செவ்வாய் முதல் 102.5% இறக்குமதி வரியை (tariff) நடைமுறைசெய்கிறது.

EV வாகனங்களுக்கு மட்டுமன்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் solar cells (50%), computer chip (50%), syringes, இரும்பு (25%), அலுமினியம் (25%) ஆகியவற்றுக்கும் பைடென் அரசு இறக்குமதி வரியை அதிகரித்து உள்ளது.

அதேவேளை ஐரோப்பாவின் Stellantis நிறுவனமும் சீனாவின் Leapmotor நிறுவனமும் கூட்டக செப்டம்பர் மாதம் முதல் ஐரோப்பாவில் EV வாகனங்களை விற்பனை செய்யவுள்ளன.

அமெரிக்க GM என்ற வாகன நிறுவனத்தின் முன்னாள் பிரதம பொறியியலாளரான Terry Woychowski தனது Caresoft Global நிறுவனம் மூலம் சீன BYD தயாரிக்கும் Seagull வகை கார் ஒன்றை கொள்வனவு செய்து அமெரிக்காவில் பாகம் பாகமாக பிரித்து பார்த்துள்ளார். பரிசோதனையின் பின் Seagull காரின் தரம் அமெரிக்க வாகன சந்தைக்கு கடும் எச்சரிக்கை என்றுள்ளார் Woychowski.

Seagull கார் நிரம்பிய கலம் (battery) ஒன்றில் 405 km தூரம் பயணிக்க வல்லது. இதன் அதி கூடிய வேகம் 130 km/h ஆக உள்ளது. சிறிய கார் ஒன்றுக்கு இது போதுமானது.

Seagull சீனாவில் $12,000 க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இது வழமையாக பயன்படும் lithium iron கலங்களுக்கு பதிலாக lithium iron phosphate கலங்களை பயன்படுத்துகின்றது. அமெரிக்காவின் Ford நிறுவனமும் தற்போது சீனாவின் CATL நிறுவனத்துடன் இணைந்து இவ்வகை கலங்களை சீனாவில் தயாரிக்க முனைந்துள்ளது.

பைடெனின் புதிய வரிப்படி இந்த கார் அமெரிக்காவில் $24,000 க்கும் அதிகமாகும்.

BYD நிறுவனத்தின் பெரிய காராகிய Seal தற்போது ஐரோப்பாவில் $50,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் ஏறக்குறைய 0% EV சந்தையை கொண்டிருந்த BYD தற்போது 10% EV சந்தையை கொண்டுள்ளது.