சீன Huawei நிறுவன CFO கனடாவில் கைது

Huawei

Huawei Technologies என்ற பிரபல சீன தொழில்நுட்ப நிறுவனத்தின் Chief Financial Officer (CFO) கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த கைது இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
.
அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள தடைகளை மீறி, Huawei ஈரானுக்கு தொழிநுட்ப பொருட்களை விற்பனை செய்துள்ளது என்று அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது. Huawei தயாரிக்கும் பொருட்கள் அமெரிக்க பாகங்களையும் கொண்டுள்ளன.
.
கைது செய்யப்பட்டுள்ள Meng Wanzhou என்ற CFO Huawei நிறுவனத்தை ஆரம்பித்த Ren Zhengfei என்பவரின் மகள் ஆவார். இவர் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி வான்கூவர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இந்த செய்தி இன்றே (டிசம்பர் 5) பகிரங்கத்துக்கு வந்துள்ளது.
.
இவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாமா என்பதை வெள்ளிக்கிழமை கனடிய நீதிமன்றம் தீர்மானிக்கும்.
.
Meng Wanzhouவை தடுத்து வைத்துள்ளமை அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையை மேலும் உக்கிரம் அடைய வைத்துள்ளதுடன், கனடாவையும் உள்ளே இழுத்துள்ளது.
.
சீனாவின் Huawei மற்றும் ZTE நிறுவனங்களின் அதீத வளர்ச்சி, குறிப்பாக 5G தொழிநுட்ப வளர்ச்சி, மேற்கு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக அமையலாம் என்று மேற்கு நாடுகள் கருதுகின்றன.
.