சுகுமாரன், Chan தூக்கில் இடப்படும் சாத்தியம்

Sukumaran

இங்கிலாந்தில் 1981 ஆம் ஆண்டு பிறந்து ஆஸ்திரேலியா வாசியான மையூரன் சுகுமாரனுக்கும், Andrew Chan கும் விரைவில் இந்தோனேசிய அரசு மரணதண்டனை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மொத்தம் 9 நபர்கள் இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதை (heroin) எடுத்து செல்ல முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.  2006 ஆம் ஆண்டில் இவர்களுக்கு மரணதண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்தோனோசியாவில் துப்பாகியால் சுட்டே மரணதண்டனை வழங்கப்படும்.
.
ஆஸ்திரேலியா சுகுமாரனையும், Chan ஐயும் ஆஸ்திரேலியா சிறைக்கு எடுக்க பல முயற்சிகள் எடுத்திருந்தும் இந்தோனேசியா மரணதண்டனை வழங்குவதிலேயே குறியாக உள்ளது. ஆஸ்திரேலியா தமது சிறையில் தண்டனை அனுபவிக்கும் இந்தோனேசிய போதை கடத்தல்காரர் சிலரை பரிமாற்றம் செய்யவும் விரும்பி இருந்தது. ஆனால் இந்தோனேசியா மறுத்துவிட்டது. இவர்கள் இருவரும் இப்போது Bali நகரத்தில் இருந்து Nusakambangan தீவுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். இந்த தீவிலேயே மரண தண்டனை வழங்கப்படும்.
.
மரண தண்டனைக்கு 72 மணித்தியாலத்துக்கு முன்னராக இவர்களுக்கு தண்டனை நேரம் அறிவிக்கப்படும். ஆனால் அது இதுவரை நடைபெறவில்லை. தண்டனை நடுச்சாமத்திலே இடம்பெறும். உறவினர்களை முன்னைய மாலை 6 மணிவரை பார்வையிட வசதி செய்யப்படும். இந்த இருவரினதும் உறவினர்கள் பலரும் இந்தோனேசியா சென்றுள்ளனர்.
.

ஏனையோர் Si Yi Chen, Michael Czugaj, Renae Lawrence, Tan Duc Thanh Nguyen, Matthew Norman, Scott Rush, Martin Stephens ஆவார்.