சுமார் 3 ஆண்டுகளில் இஸ்ரேலில் 5ம் தேர்தல்

சுமார் 3 ஆண்டுகளில் இஸ்ரேலில் 5ம் தேர்தல்

சுமார் ஒரு ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ள இஸ்ரேலின் கூட்டணி அரசு மீண்டும் கவிழ்ந்து உள்ளது. அதனால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் அக்டோபர் மாதம் நிகழவுள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் அங்கு நிகழவுள்ள 5ம் தேர்தல்.

Naftali Bennett என்ற தற்போதைய பிரதமரின் சொந்த கட்சியே பிரதமரின் காலை வாரி உள்ளது. இந்த ஆட்சி ஒருவருக்கு ஒருவர் முரணான 8 கட்சிகளின் கூட்டணி. அதில் United Arab List என்ற இஸ்ரேலில் வாழும் பலஸ்தீனர் கட்சியும் ஒன்று.

அதேநேரம் தற்போதைய கூட்டணியால் விரட்டப்பட்ட முன்னாள் பிரதமர் Netanyahu மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அடுத்த தேர்தலிலும் எவரும் பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றுவது கடினம்.

Netanyahu மீது தற்போது ஊழல் வழக்குகளும் தொடர்கின்றன. அவர் தான் குற்றம் எதையும் செய்யவில்லை என்கி