சுவிஸ் வங்கி பங்கின் பெறுமதி 30% ஆல் வீழ்ச்சி

சுவிஸ் வங்கி பங்கின் பெறுமதி 30% ஆல் வீழ்ச்சி

Credit Suisse என்ற சுவிஸ் வங்கியின் பங்குச்சந்தை பங்கு ஒன்றின் பெறுமதி இன்று புதன் சுமார் 30% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வங்கியை இயக்க தேவையான பணம் கையிருப்பில் இல்லாமையும், அதை வங்கியின் முன்னணி பங்காளர் வழங்க முன்வராமையுமே பங்கு விலை வீழ்ச்சி அடைய காரணம்.

கடந்த கிழமை அமெரிக்காவின் SVB என்ற வங்கி முறிந்த பின் வங்கிகள் மீது பண வைப்பாளர் சந்தேக பார்வையை கொண்டுள்ளனர். வங்கிகளை கண்காணிக்கும் அரச அமைப்புகள் மீதும் மக்கள் அவநம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் சிலர் தமது வைப்புகளை மீள பெறுகின்றனர்.

Credit Suisse ஒரு சுவிஸ் நாட்டில் உள்ள வங்கி என்றாலும் தற்போது அதன் முதன்மை உரிமையாளர் வெளி நாடுகளே. தற்போது இதன் முதலாவது பெரிய பங்கு உரிமையாளர் Saudi National Bank என்ற சவுதி வங்கி ஆகும். Credit Suisse வங்கியின் 9.8% பங்குகளை Saudi National Bank கொண்டுள்ளது. ஆனால் Saudi National Bank மேலதிக முதலீடு செய்ய மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு முதலீட்டாளர் சுமார் $133 பில்லியன் பணத்தை Credit Suisse வங்கியில் இருந்து மீள பெற்றுள்ளனர். அதனால் பண கையிருப்பு பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த வாங்கி $7.9 பில்லியன் நட்டத்தையும் அடைந்து இருந்தது.

2007ம் ஆண்டில்  Credit Suisse பங்கு ஒன்றின் விலை சுமார் 84.00 பிராங்க் ஆக இருந்தது. ஆனால் அது இன்று 1.70 பிராங்க் ஆக மட்டுமே உள்ளது.

இதை தொடர்ந்து பல ஐரோப்பிய வங்கிகளின் பங்கு பெறுமதிகளும் பாரிய வீழ்ச்சியை அடைந்து உள்ளன.