சூடானில் இருந்து பல தூதரக ஊழியர் வெளியேற்றம்

சூடானில் இருந்து பல தூதரக ஊழியர் வெளியேற்றம்

ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) இடம்பெறும் மோதல்களில் இருந்து தம்மை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் தமது தூதரக ஊழியர்களை வெளியேற்றி உள்ளன.

அமெரிக்கா தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிரு சூடான் தலைநகர் Khartoum இல் இருந்து Chinook ஹெலிகள் மூலம் வெளியேற்றி உள்ளது. பிரித்தானிய பிரதமரும் தமது தூதரக ஊழியர்களை இன்று ஞாயிறு படையினரின் உதவியுடன் வெளியேற்றி உள்ளதாக கூறியுள்ளார்.

பிரெஞ்சு ஊழியர்கள் தம் மீதான தாக்குதல் காரணமா மீண்டும் தமது தூதரகம் சென்றுள்ளனர்.

எகிப்து, பாகிஸ்தான், கனடா போன்ற நாடுகள் தமது ஊழியர்களை கடல் மூலம் சவுதிக்கு வெளியேற்றி உள்ளன.

இத்தாலி, பெல்ஜியம், துருக்கி, ஜப்பான் ஆகிய நாடுகளும் தமது தூதரக ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபாடுள்ளனர்.

சூடானின் இராணுவமும், அந்த நாட்டின் விசேட படையும் (Rapid Support Forces) தம்முள் மோதிக்கொள்வதால் தலைநகரில் நிலைமை ஆபத்தாக உள்ளது. பல விமான சேவைகள் தமது சேவைகளை இடைநிறுத்தி உள்ளனர்.