சூடான் பிரதமர் தடுப்பில், இராணுவம் ஆட்சியில்

சூடான் பிரதமர் தடுப்பில், இராணுவம் ஆட்சியில்

ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) மீண்டும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. இராணுவம் அந்நாட்டின் பிரதமரையும், பல அமைச்சர்களையும் இரகசிய இடத்தில் தடுத்து வைத்துள்ளது. வீதிக்கு வந்த ஆர்பாட்டக்காரர்களிலும் குறைந்தது 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

பிரதமர் Abdalla Hamdok இராணுவ சதிக்கு ஆதரவு வழங்க மறுத்ததனாலேயே தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
இராணுவ அதிகாரி ஜெனரல் Abdel Fattah al-Burhan தற்போது நாடு முழுவதும் அவசரகால நிலையை அறிவித்து உள்ளார். அந்நாட்டு பாராளுமன்றமும் தற்போது கலைக்கப்பட்டு உள்ளது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி Omar al-Bashir ஆர்ப்பாட்டங்கள் மூலம் விரட்டப்பட்டு இருந்தார். Bashir அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் விரோதத்துக்கு உள்ளானவர். Bashir விரட்டப்பட்ட பின் இராணுவமும், அரசியல்வாதிகளும் இணைந்து கூட்டு ஆட்சி ஒன்றை அமைத்தனர். ஆனால் இந்த ஆட்சி பல தடவைகள் முறியும் நிலைக்கு சென்றுள்ளது.

சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் Horn of Africa வுக்கு பொறுப்பான அதிகாரியான Jeffrey Feltman (envoy) சூடானின் இராணுவ அதிகாரிகளையும், அரசியல் அதிகாரிகளையும் சந்தித்து உள்ளார்.