சூரியனை ஆராய பயணிக்கும் இந்தியாவின் ஆதித்தயா

சூரியனை ஆராய பயணிக்கும் இந்தியாவின் ஆதித்தயா

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியா ஆதித்தயா (Aditya-L1) என்ற கலத்தை இன்று சனிக்கிழமை ஏவியுள்ளது.

சூரியன் பூமியில் இருந்து சுமார் 150 மில்லியன் km தூரத்தில் உள்ளது. ஆனால் ஆதித்தயா சுமார் 1.5 மில்லியன் தூரம் சென்று Lagrange Point என்ற இடத்தில் நிலைகொண்டு ஆய்வுகளை செய்யும்.

Lagrange Point என்ற புள்ளியில் பூமி, சூரியன் ஆகியவற்றின் ஈர்ப்பு விசைகள் ஏறக்குறைய சமனாக உள்ளன. அதனால் ஏவப்படும் கலங்கள் நீண்டகாலம் இழுபட்டு செல்லாது நிலைகொள்ளும்.

இந்த புள்ளியை ஆதித்தயா அடைய சுமார் 4 மாதங்கள் எடுக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஏற்கனவே இங்கு தமது ஆய்வு கலங்களை கொண்டுள்ளன. அதில் James Webb Space Telescope குறிப்பிடத்தக்கது.