சென்னையில் இருந்து பலாலி நோக்கி 9I101 விமான சேவை

சென்னையில் இருந்து பலாலி நோக்கி 9I101 விமான சேவை

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே மீண்டும் விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கிறது. இந்தியாவின் Alliance Air விமான சேவையின் flight 9I101 இன்று டிசம்பர் 12ம் திகதி இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.

சென்னையில் இருந்து திங்கள் காலை 9:25 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட விமானம் காலை 10:20 மணியளவிலேயே பயணத்தை ஆரம்பித்தது. இந்த சேவையை ATR 72-600 வகை விமானம் செய்கிறது. இவ்வகை விமானத்தில் சுமார் 78 ஆசனங்கள் இருக்கும். இது சுமார் 510 km/h வேகத்தில், 7,600 மீட்டர் (25,000 அடி) உயரத்தில் பறக்கும். ஆனாலும் பலாலிக்கான சேவை சுமார் 16,000 அடி  உயரத்திலேயே பயணிக்கும்.

இன்றைய பயணம் தாமதமாக ஆரம்பித்ததால் இந்த விமானம் பலாலி விமான நிலையத்தை (JAF) திங்கள் காலை 11:50 அளவில் அடையும்.

இந்த சேவை ஒவ்வொரு கிழமையும் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு தினங்களில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. யாழுக்கு சென்னைக்கும் இடையிலான பயணத்துக்கு சுமார் 1 மணித்தியாலம் 25 நிமிடங்கள் தேவை.

இந்த சேவைக்கான கட்டணம் இந்திய ரூபாய்களில் மட்டுமே தற்போது செலுத்தலாம். Alliance Air இணையத்தில் தற்போது இலங்கை ரூபா அல்லது அமெரிக்க டாலர் மூலம் பணம் செலுத்தும் வசதி இல்லை. அதனால் வெளிநாட்டவருக்கு நாணய மாற்று செலவும் ஏற்படலாம்.

தற்போது சென்னை-யாழ் கட்டணம் தற்போது 6,702 இந்திய ரூபாய்களாக உள்ளது. ஆனால் யாழ்-சென்னை கட்டணம் 9,200 இந்திய ரூபாய்களாக ஆக உள்ளது, அது சுமார் 41,818 இலங்கை ரூபா (சுமார் $114.00). பண சந்தையில் தற்போது 1 இந்திய ரூபாய் 4.47 இந்திய ரூபாய் ஆக உள்ளது.

Alliance Air விமான சேவை முன்னர் Air India விமான சேவையின் அங்கமாக இருந்தது. ஆனால் அண்மையில் Air India விமான சேவை Tata நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டபின் Alliance Air ஒரு தனி நிறுவனமாக இயங்குகிறது.