செயற்கை சீனி erythritol உடலுக்கு மிகவும் ஆபத்து

செயற்கை சீனி erythritol உடலுக்கு மிகவும் ஆபத்து

Erythritol என்ற செயற்கை சீனி (sugar replacement) உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்றும், இந்த ஆபத்து இயற்கை சீனியிலும் பல மடங்கு அதிகம் என்றும் அமெரிக்காவின் Cleveland நகரத்து Lerner Research Institute திங்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கை கூறுகிறது.

Erythritol போன்ற செயற்கை சுவையூட்டிகள் சாதாரண சீனி வழங்கும் calorie அளவை குறைத்தாலும், குருதி திரட்சி அடைவது (blood clotting), stroke, heart attack, மரணம் போன்ற விளைவுகளை பல மடங்கு அதிகரிப்பதாக மேற்படி ஆய்வு கண்டறிந்துள்ளது.

அதாவது diet குளிர்பானம் அல்லது sugar replacement பொருட்கள் சாதாரண குளிர்பானம் அல்லது சாதாரண சீனியிலும் அதிகம் ஆபத்தானவை.

உதாரணமாக diabetes போன்ற நோய்களுக்கான வாய்ப்புகளை கொண்டோரின் உணவுகளில் அதிகம் erythritol இருந்தால் அவர்கள் heart attack அல்லது stroke க்கு ஆளாகும் சந்தர்ப்பம் இரண்டு மடங்காகும் என்றும் ஆய்வு கூறியுள்ளது.

ஆனால் செயற்கை சுவையூட்டிகளை தயாரிக்கும் நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்பட்ட முற்கால ஆய்வுகள் erythritol ஆபத்தானது அல்ல என்றே கூறி வந்துள்ளன.

Sorbitol, xylitol போலவே erythritol ஒரு சுவையூட்டி. சாதாரண சீனி கொண்டுள்ள இனிப்பு சுவையின் 70% சுவையை இது கொண்டுள்ளது. ஆனால் இது ஏறக்குறைய calorie அற்றது. இது பார்வைக்கும் சீனியை போலவே இருக்கும்.

Keto என்ற உணவு கட்டுப்பாடும் இந்த செயற்கை சீனியை பயன்படுத்துகின்றன.

இந்த ஆய்வுக்கு 2004ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மொத்தம் 1,157 பேரின் குருதி மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன.