சொந்த OS தாயரிப்பில் சீனாவின் Xiaomi

சொந்த OS தாயரிப்பில் சீனாவின் Xiaomi

சீனாவின் Xiaomi என்ற smartphone தயாரிப்பு நிறுவனம் தானும் HyperOS என்ற சொந்த OS (operating system) தயாரிக்கும் முயற்சியில் ஈடுபாடுள்ளது. அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து தம்மை விடுவிக்கும் நோக்கிலேயே சீன நிறுவனங்கள் சொந்த OS தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுகின்றன.

இந்த OS அடுத்துவரும் Xiaomi 14 வகை smartphone களில் பயன்படுத்தப்படும்.

சீனாவின் Huawei என்ற நிறுவனம் 2019ம் ஆண்டு அமெரிக்கா அதன் மீது தடை விதித்ததால் Harmony OS என்ற தனது சொந்த OS ஐ தயாரித்தது. OnePlus என்ற Oppo நிறுவனமும் தனது சொந்த OS ஐ தயாரிக்கும் பணியில் உள்ளது. இவை Android OS ஐ அடிப்படையாக கொண்டாலும், பாரிய அளவில் வேறுபட்டு, Android கட்டுப்பாடில் இருந்து விலகிசெல்கின்றன.

Xiaomi யின் புதிய OS smartphone, தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற IoT பொருட்கள், smart watch போன்ற அணியும் பொருட்கள், car போன்ற வாகனங்கள் எல்லாவற்றுக்கும் பயன்படும். அதனால் அவை ஒன்றுடன் ஒன்று இலகுவில் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மிக மலிவான விலையில் கிடைக்கும் Xiaomi உலகிலேயே அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது. இந்தியாவிலும் இதுவே அதிகம் விற்பனை செய்யப்படுவது.