சோவியத் கடைசி தலைவர் கொர்பசோவ் மரணம்

சோவியத் கடைசி தலைவர் கொர்பசோவ் மரணம்

சோவியத் யூனியனின் கடைசி தலைவர் கொர்பசோவ் (Mikhail Gorbachev) இன்று தனது 91 ஆவது வயதில் மரணமானார் என்று ரஷ்ய செய்திகள் கூறுகின்றன.

தனது 54 ஆவது வயதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆக வளர்ந்த இவர் சோவியத்தை இறுதியாக ஆட்சி செய்தார். சோவியத் உள்ளே வீழ்ச்சி அடைந்ததை கண்ட இவர் சோவியத் உடைய காரணமானார்.

மேற்கில் இவருக்கு மரியாதை அதிகம் என்றாலும் ரஷ்யாவில் இவருக்கு மரியாதை அதிகம் அல்ல. சோவியத் பிரிவை மேற்கின் விருப்பப்படி செய்தார் என்று கருதுவோரும் உண்டு.

கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் இணைந்து மீண்டும் முழு ஜெர்மனி உருவாக இவரின் பங்கு மிக பிரதானம்.

பதவி விலகிய பின்னர் இவர் அமெரிக்காவின் Pizza Hut உணவத்தின் விளம்பரங்களில் பங்குகொண்டு வருமானம் பெற்று இருந்தார்.