ஜப்பானில் ஊழல் விசாரணை, 4 அமைச்சர்கள் விலகினர்

ஜப்பானில் ஊழல் விசாரணை, 4 அமைச்சர்கள் விலகினர்

ஊழல் விசாரணை காரணமாக ஜப்பானில் 4 அமைச்சர்கள் பதவி விலகி உள்ளனர். அத்துடன் 6 உதவி அமைச்சர்களும் கூடவே பதவி விலகி உள்ளனர். இந்த விசாரணையில் சுமார் $3.4 மில்லியன் பணம் அடங்கி உள்ளது.

Hirokazu Matsuno (Chief Cabinet Secretary), Yasutoshi Nishimura (Economy and Industry அமைச்சர்), Junji Suzuki (Internal Affairs அமைச்சர்), Ichiro Miyashita (Agriculture அமைச்சர்) ஆகியோரே பதவி விலகிய அமைச்சர்கள்.

இந்த விசாரணையால் பிரதமர் Fumio Kishida வின் Liberal Democratic (LDP) கட்சிக்கு ஆதரவு மேலும் சரிந்து உள்ளது. இந்த கட்சிக்கு சுமார் 30% ஆதரவே தற்போது உள்ளது.

பதவி விலகிய அனைவரும் LDP கட்சிக்குள் பலமான அணியை சார்ந்தவர்கள்.

Matsuno வருமான வரிக்கு தனது முழு வருமானத்தையும் பதிவு செய்திருக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.