ஜப்பானில் கத்தி குத்துக்கு 19 பலி

Sagamihara

 

ஜப்பானின் தலைநகர் ரோக்கியோவுக்கு (Tokyo) மேற்கே உள்ள Sagamihara என்ற நகரில் உள்ள செயல்பாடு குறைந்தோருக்கான நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற கத்தி குத்துகளுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். தாக்குதலை நடத்தியவர் என கருதப்படும், 26 வயதுடைய, Satoshi Uematsu என்பவர் செவ்வாய் காலை 3:00 மணியளவில் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
.
சரண் அடைந்தவரிடம் இருந்து பல கத்திகள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் சில இரத்தக்கறையுடன் உள்ளனவாம். இவர் தான் முன்னர் இந்த நிலையத்தில் பணி புரிந்ததாக கூறியுள்ளார்.
.
இந்த நிலையத்தில் சுமார் 150 குறைபாடுகள் உள்ளோர் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி செவ்வாய் அதிகாலை 2:30 மணியளவில் இந்நிலையை பணியாளர் ஒருவர் போலீசாரை அழைத்து தாக்குதல் பற்றி அறிவித்துள்ளார்.
.