ஜெனரல் Hyten: சீனா அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பின்தள்ளும்

ஜெனரல் Hyten: சீனா அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பின்தள்ளும்

இன்று வியாழன் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய இராணுவ அதிகாரியான, Vice Chairman of the Joint Chiefs of Staff பதவி வகிக்கும் ஜெனரல் John Hyten தனது கூற்று ஒன்றில் சீன இராணுவ பலம் விரைவில் அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பின்தள்ளும் என்று கூறியுள்ளார். இவரின் கருத்து நேற்று அமெரிக்க ஜெனரல் Milley கூறிய கணிப்புடன் இசைந்து உள்ளது.

அமெரிக்கா தனித்து சீனாவுடன் போட்டியிட்டால் சுமார் 5 ஆண்டுகளில் அமெரிக்கா பின் தள்ளப்படும் என்றும், ஐரோப்பா போன்ற அமெரிக்க சார்பு நாடுகள் அமெரிக்காவுடன் இணைத்து போட்டியிட்டால் மட்டுமே தாம் நீண்ட காலத்துக்கு சீனாவுக்கு மேலாக இருக்கலாம் என்றும் Hyten இன்று கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா மொத்தம் 9 hypersonic ஏவுகணை சோதனைகளை மட்டுமே செய்து இருந்ததாகவும், அதே காலத்தில் சீனா பல நூறு heypersonic சோதனைகளை செய்துள்ளதாகவும் Hyten கூறியுள்ளார்.

அவர் வடகொரியா தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் தற்போதைய வடகொரியா சர்வாதிகாரி Kim Jong Un தனது தந்தையை போல் அல்லாது, ஏவுகணைகள் சோதனைகள் தோல்வியை அடையும்போது விஞ்ஞானிகளை கொலை செய்யாது பதிலாக அவர்களை மேலும் ஊக்குவித்ததாலேயே இன்று உலகத்தின் 118வது பொருளாதார நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ICBM ஏவுகணைகளை கொண்டுள்ளது என்றும் Hyten கூறியுள்ளார்.

ஜெனரல் Hyten அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ளார்.