ஜெர்மனில் தாக்குதல், பலர் பலி

Munich
மூனிக் என்ற (Munich) ஜெர்மனின் தென்பகுதி நகரில் வெள்ளி மாலை பலர் கொண்ட குழு ஒரு துப்பாக்கி தாக்குதல்களை செய்து வருகிறது. முதலில் அங்குள்ள Olympia Shopping Centerஇல் இந்த தாக்குதல் வெள்ளி மாலை 8:00 மணியவில் இடம்பெற்று உள்ளது. பின்னர் இந்த தாக்குதல்கள் வேறு பொது இடங்களுக்கும் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
.
உடனடியாக போலீசார் பொதுமக்களை பொது இடங்களுக்கு செல்லாது வீட்டில் இருக்குமாறு கேட்டுள்ளார். அங்குள்ள ரயில் சேவை உடனடியாக ரயில் நிலையத்தில் இருந்தோரை வீடு செல்ல வேண்டியுள்ளது.
.
இது ஒரு பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்றும், பல மரணங்களை தாம் எதிர் பார்ப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். தாம் குறைந்தது 3 ஆயுததாரிகளை தேடுவதாக போலீசார் கூறி உள்ளனர். வேறு செய்திகள் 9 பேர் பலியாகி உள்ளதாக கூறுகின்றன.
.

துப்பாக்கிதாரர் இன்னமும் கைது செய்யப்படவோ அல்லது பொலிஸாரின் கட்டுப்பாடில் கொண்டுவரப்படவோ இல்லை.
.