டாலருக்கு ரூபா 260

டாலருக்கு ரூபா 260

அமெரிக்க டாலர் ஒன்றுக்கு தற்போது சுமார் 260 இலங்கை ரூபாய்கள் கிடைக்கின்றன. மார்ச் 8ம் திகதி இலங்கை மத்திய வங்கி டாலர் ஒன்றுக்கான நாணய மாற்று வீதத்தை 15% ஆல் குறைத்த பின்னரே உண்டியல் சந்தையில் 260 ரூபாய் வரை கிடைக்கிறது.

மேற்படி 15% பெறுமதி இழப்பின் பின் அரச வங்கிகள் சுமார் 230 ரூபாய்களை மட்டுமே வழங்குகின்றன. திங்கள் வரை அரச வங்கிகள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 203 ரூபாய்களை மட்டுமே வழங்கி இருந்தன.

கூடிய அளவில் இலங்கை ரூபாய்களை வழங்கும் உண்டியல் மூலமான பண மாற்றை இலங்கை தற்போது சட்டத்துக்கு விரோதமானதாகவே கணிக்கிறது. உண்டியல்கள் பொதுவாக ஆளை பார்த்தே நாணய மாற்றை தீர்மானிக்கும்.

தை மாத இறுதியில் இலங்கை கொண்டிருந்த அந்நியசெலவாணி $2.36 பில்லியன் ஆக மட்டுமே இருந்தது.

இலங்கை வங்கி இலங்கை ரூபாயின் பெறுமதியை மேலும் குறைக்கலாம் என்றும் கருதப்டுகிறது.