டாலருக்கு 230 ரூபாய்கள், இலங்கை அரசு தீர்மானம்

டாலருக்கு 230 ரூபாய்கள், இலங்கை அரசு தீர்மானம்

அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 230 இலங்கை ரூபாய்களை வழங்க இலங்கை அரசு தீர்மானித்து உள்ளது. இந்த செய்தி இன்று திங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

சந்தையில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு சுமார் 240 ரூபாய்கள் கிடைக்கும் நிலையிலும் இலங்கை வங்கிகள் 200 ரூபாய் முதல் 203 ரூபாய் வரையே வழங்கி வந்திருந்தது (peg).

அதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் வங்கிகளுக்கு அப்பால் இயங்கும் சிறு முகவர் மூலமே தமது டாலர்களை ரூபாய்கள் ஆக்கினர். அதனால் இலங்கை அரசுக்கு கிடைக்க இருந்து அந்நியசெவாணி கிடைக்வில்லை.

இலங்கை வங்கிகள் 230 ரூபாய்கள் வழங்க முன் வந்தால் சட்டப்படியான வங்கிகள் மூலம் நாணய மாற்று செய்வோர் தொகை அதிகரிக்கும்.

அதேவேளை சிலர் இலங்கை தனது சட்டப்படியான நாணய மாற்று வீதத்தை 250 முதற் 260 ரூபாய்களாக அதிகரிக்க வேண்டும் என்றுள்ளனர் .