டிரம்ப் தாண்டவ கூத்து 2

TPP

பலரும் எதிர்பார்த்தபடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சிலநாள் ஆட்சிக்குள் பல கூத்துக்களை நடாத்தியுளார். அவற்றுள் முதலாவது பெரிய கூத்து ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், யேமன் ஆகிய 6 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்களை 90 நாட்களுக்கு தடை செய்தல். முதலில் அமரிக்க வதிவுரிமை (green card) பெற்றவர்களையும் இந்த தடை மூலம் திருப்பி அனுப்பினார் டிரம்ப், பின்னர் அதை மாற்றிக்கொண்டனர்.
.

டிரம்பின் இரண்டாவது தாண்டவ கூத்துக்கு ஆஸ்திரேலியா இலக்காகி உள்ளது. கடந்த சனிக்கிழமை  டிரம்புக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் Malcolm Turnbullக்கும் இடையில் முதல் தொலைபேசி உரையாடல் இடப்பெற்று இருந்தது. ஒரு மணி நேரம் இடப்பெற இருந்த உரையாடலை டிரம்ப் 20 நிமிடங்களில் முறித்து கொண்டாராம். இதனால் விசனம் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.
.
ஒபாமா காலத்தில் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்றின்படி ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகளில் 1250 பேரை அமெரிக்கா எடுத்துக்கொள்ள இங்கி இருந்தது. ஆனால் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய விரும்பினார். பேச்சு பாதகமாக அமைய, ஆத்திரம் கொண்ட டிரம்ப் தொலைபேசி தொடர்பை துண்டித்தார்.
.
இச்செய்தி பகிரங்கத்துக்கு வர, புதன் இரவு இந்த ஒப்பந்தம் ஒரு ‘dump deal’ என்று கூறியுள்ளார் டிரம்ப். அத்துடன் ஆஸ்திரேலியா அடுத்த ‘Boston bombers’ களை அனுப்ப உள்ளது என்றும் கூறியுள்ளார்.
.
டிரம்பின் செயல்கள் ஆஸ்திரேலியாவை வேறு வழி இன்றி சீனாவின் பக்கம் தள்ளும். டிரம்ப் சில நாட்களின் முன், ஒபாமா அரசால் உருவகிக்கப்பட்ட, TPP (Trans Pacific Partnership) என்ற வர்த்தக உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார். TPP சீனாவை தவிர்த்து, சீனாவுக்கு போட்டியாக, அமைய இருந்த ஓர் வர்த்தக உடன்படிக்கை ஆகும்.
.
டிரம்ப் வெளியேறிய பின், ஆஸ்திரேலியா அமெரிக்காவின் இடத்துக்கு சீனாவை இழுக்க முன்வந்துள்ளது. ஜப்பான் தவிர்ந்த ஏனைய நாடுகளும் அந்த கருத்துக்கு சாதகமான கொள்கைகளை கொண்டுள்ளன. TPPயுள் ஆஸ்திரேலியா, புரூணை,கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, நியூசிலாந்து,பெரு, சிங்கப்பூர், வியன்டனாம் ஆகிய நாடுகளும் அடங்கும்.
.