டிரம்ப் பிரித்தானிய பயணம் பின்போடல்?

Trump

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது பிரித்தானிய உத்தியோகபூர்வ பயணத்தை (state visit) பின்போட விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் மேயிடம் கூறியதாக பிரித்தானிய பத்திரிகையான காடியன் (Guardian) கூறியுள்ளது. டிரம்ப் பிரித்தானியாவுக்கு சென்றால் அங்கு பலத்த எதிர்ப்பு ஊர்வலங்களை சந்திக்க நேரிடும் என்ற பயமே இந்த பின்னடிப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
.
ஆனால் வெள்ளைமாளிகையும், மேயின் அலுவலகமும் டிரம்பின் பயணம் குறித்தபடியே இடம்பெறும் என்று கூறியுள்ளன. ஆனால் இரு தரப்பும் டிரம்ப், மே இடையிலான தொலைத்தொடர்பு உரையாடல் தொடர்பாக கருத்து கூற மருத்துவிட்டன.
.
டிரம்ப் பிரதமர் மேயின் பலத்த ஆதரவுடனும், இரானியின் அழைப்பிலுமே பிரித்தானியா செல்லவிருந்தார். அண்மையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் மே தான் வைத்திருந்த பெரும்பாண்மை ஆட்சியை இழந்து இருந்தார். இந்நிலையில் அவர் ஊர்வலங்களை கட்டுப்படுத்தமுடியாமல் போகலாம் என்று கருதப்படுகிறது.
.

மே ஜனவரியில் இடம்பெற்ற தனது அமெரிக்க பயணத்தின்போது டிரம்புக்கான பிரித்தானிய பணய அழைப்பை விடுத்திருந்தார்.
.