டில்லியில் பட்டாசுக்கு தடை

India

இந்தியாவின் தலைநகர் டில்லியில் பட்டாசுக்கு தடை விதித்துள்ளது இந்திய உயர் நீதிமன்றம். கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் தடவையாக பட்டாசுகளுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டு இருந்திருந்தாலும், தீபாவளியை கருத்தில் கொண்டு கடந்த மாதம் இந்த தடை விலக்கப்பட்டு இருந்தது. ஆனால் மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றம் சென்று தடையும் திங்கள் முதல் மீள்நடைமுறை செய்யப்பட்டு உள்ளது.
.
முற்காலங்களில் சீனாவின் நகரங்கள் சுவாசிக்க முடியாத அளவு மாசுபட்ட வளியை கொண்டிருந்தாலும், தற்போது டில்லியே அதி கூடிய மாசுபட்ட வளியை கொண்டுள்ளது. வாகனங்கள் வளி மாசுபடலுக்கு முதன்மை காரணி என்றாலும், தீபாவளி காலத்தில் பட்டாசுகளே அதிக அளவு சுவாசத்துக்கு ஆபத்தான துகள்களை வளியில் கலக்கின்றன.
.
கடந்த வருடம் தீபாவளி பட்டாசு மாசுபடலால் சில பாடசாலைகள் 3 நாட்களுக்கு மூடப்படவேண்டி இருந்ததாம்.
.
2016 ஆம் ஆண்டு உலக சுகாதார மைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி டெல்லி வளியில் சுவாசத்துக்கு உகந்த அளவிலும் 16 மடங்கு அதிக மாசுக்கள் இருந்துள்ளன.
.
இந்த வழக்கு ஆறு வயதிலும் குறைந்த 3 சிறுவர்களால், அவர்களின் பெற்றாரின் உதவியுடன் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஒரு பெற்றாரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் இந்த தீர்ப்பை பாராட்டி உள்ளார்.
.