டுபாய் ஹோடேலில் பெரும் தீ

AddressHotel

2016 ஆம் ஆண்டை வரவேற்க டுபாய் 1.6 தொன் நிறை வெடிமருந்துகள் கொண்ட வானவேடிக்கையை அங்குள்ள உலகின் அதியுயர் கட்டமான Burj Khalifa செய்ய திட்டமிட்டிருந்தது. அதை பார்க்க பல்லாயிரக்கணக்கனோர் அப்பகுதில் நிறைந்திருந்தனர். அத்துடன் 400,000 LED விளக்குகளும் பயன்படுத்தப்பட இருந்தது.
.
ஆனால் உள்ளூர் நேரம் இரவு 12:00 ஆகுமுன், Burj Khalifa இல் வானவேடிக்கை தொடங்குமுன் அக்கட்டடத்துக்கு அருகில் உள்ள Address Downtown ஹோட்டல் என்ற ஆடம்பர ஹோட்டலை பெரும் தீ பிடித்துள்ளது. இத்தீக்கான காரணம் என்னவென்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. Burj Khalifa வானவேடிக்கை தொடருமா அல்லது இரத்து செய்யப்படுமா என்றும் அறிவிக்கப்படவில்லை.
.
இந்த ஹோட்டல் சுமார் 20 மாடிகளை கொண்டது.
.