தஞ்சாவூர் இந்து ஊர்வலத்தை மின் தாக்கி 11 பேர் பலி

தஞ்சாவூர் இந்து ஊர்வலத்தை மின் தாக்கி 11 பேர் பலி

தமிழ்நாட்டு மாவட்டமான தஞ்சாவூரில் வீதி வழி சென்ற இந்து ஊர்வல வாகனம் ஒன்று உயர் அழுத்த மின் இணைப்பை தொட்டதால் ஏற்பட்ட விபத்துக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் இரு சிறுவர்களும் அடங்குவர். இந்த விபத்து புதன் அதிகாலை நிகழ்ந்துள்ளது.

மேலும் 3 பேர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மின் தாக்கிய வாகனம் தீக்கும் இரையாகி உள்ளது.

இறந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 500,000 இந்திய ரூபாய்களை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

பிரதமர் மோதியும் கவலை தெரிவித்து உள்ளார்.