தனியார் முதலீட்டை மீண்டும் நாடும் SriLankan

SriLankan

இலங்கையின் விமான சேவையான SriLankan மீண்டும் தனியார் முதலீட்டை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு முன்னரும் சுமார் $1 பில்லியன் கடனில் உள்ள இந்த விமான சேவை முதலீடு பெற்று தனியார் வசமாக முனைந்திருந்தது. அப்போது சிறிது நாட்டம் கொண்டிருந்த TPG Capital (Texas Pacific Group Capital) என்ற அமெரிக்க முதிலீட்டு நிறுவனம் பின்னர் பின்வாங்கி இருந்தது.
.
SriLankan விமான சேவையின் கணக்கியல் புத்தகங்களை ஆராய்ந்த பின்னரே TPG முதலிட மறுத்து பின்வாங்கி இருந்தது.
.
தற்போது மேலும் இரண்டு நிறுவனங்கள் SriLankan விமான சேவையையில் முதலிட நாட்டம் கொண்டுள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.
.
2010 ஆம் ஆண்டு வரை டுபாயின் Emirates விமான சேவை SriLankan விமான சேவையில் 44% உரிமையை கொண்டிருந்தது. ஆனால் அப்போது பதிவியில் இருந்த ராஜபக்ச அரசு Emirates கொண்டிருந்த உரிமையை மீள பெற்றிருந்தது. Emirates சேவையுடன் கூட்டாக இருந்த காலத்தில் SriLankan இலாபத்தில் இயங்கி இருந்தது.
.
2017 ஆம் ஆண்டு அறிக்கைகளின்படி SriLankan விமான சேவை சுமார் Rs 141 பில்லியன் ($ 879 million) கடனில் இருந்துள்ளது.

.